திமுக முப்பெரும் விழா: கரூர் மாவட்டத்தில் இன்று போக்குவரத்து மாற்றம்
திமுகவின் முப்பெரும் விழாவையொட்டி கரூர் மாவட்டத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.;
கரூர்,
கரூர் மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) திமுகவின் முப்பெரும் விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ளனர். தொடர்ந்து தமிழக முதல்-அமைச்சரின் வருகையையொட்டி சுக்காலியூர் முதல் புலியூர் வரை கனரக வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதேபோல முப்பெரும் விழாவை முன்னிட்டு சில வழித்தடங்களில் மாற்றம் செய்யப்பட்டு வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்லும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் கரூர்- திருச்சி சாலை வழியாக கோவை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்கள் இன்று மட்டும் மாயனூர் டோல் பிளாசாவை அடுத்து 2 கி.மீட்டரில் உப்பிடமங்கலம் பிரிவு வழியாக அரவக்குறிச்சி பைபாஸ் வழியாக செல்லும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
இதேபோல கரூர்-திருச்சி சாலை வழியாக திண்டுக்கல், மதுரை, அரவக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் இன்று உப்பிடமங்கலம் பிரிவு வழியே பாளையம் வழியாக செல்லும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இதேபோல கோவை-கரூர் மார்க்கத்தில் திருச்சி செல்லும் வாகனங்கள் இன்று க.பரமத்தி நான்கு ரோடு சந்திப்பு வழியாக நொய்யல் குறுக்கு சாலை, வேலாயுதம்பாளையம், வாங்கல் வழியாக திருச்சி செல்லும் வகையில் மாற்றுப்பாதையில் திட்டமிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து ஈரோடு-கரூர் மார்க்கத்தில் திருச்சி செல்லும் வாகனங்கள் நொய்யல் ரவுண்டானா, வேலாயுதம்பாளையம், புகழூர், வாங்கல், மோகனூர் வழியாக திருச்சி செல்லும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இதேபோல மதுரை, திண்டுக்கல்லில் இருந்து கரூர் வழியாக வரும் திருச்சி செல்லும் வாகனங்கள் இன்று மாற்றுப்பாதையான அரவக்குறிச்சி, புங்கம்பாடி பிரிவு வழியாக ஆர். வெள்ளோடு, பாளையம், சிந்தாமணிப்பட்டி, தோகைமலை வழியாக செல்லும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.