தேர்தலில் திமுக டெபாசிட் இழக்கும்; அன்புமணி ராமதாஸ்

அன்புமணி ராமதாஸ் தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் மேற்கொண்டு வருகிறார்.;

Update:2025-08-31 22:41 IST

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் மேற்கொண்டு வருகிறார். உரிமை மிட்க தலைமுறை காக்க என்ற தலைப்பில் அவர் பல்வேறு மாவட்டங்களுக்கு நடை பயணம் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் பாமக தொண்டர்கள், பொதுமக்களை அன்புமணி ராமதாஸ் இன்று சந்தித்தார். இந்த நிகழ்ச்சியில் அன்புமணி ராமதாஸ் பேசுகையில்,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜெர்மனிக்கு சுற்றுப்பயணம் செல்லவில்லை, அவர் சுற்றுலா சென்றுள்ளார். திமுகவின் கொடுங்கோல் ஆட்சியை அகற்றவே உரிமை மீட்க தலைமுறை காக்க நடைபயணம் மேற்கொண்டுள்ளேன்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளிலும் திமுக டெபாசிட் இழக்கும். திமுக மீது மக்கள் கோபத்தில் உள்ளனர். திமுக ஆட்சியை நீங்கள் ரத்து செய்ய வேண்டும். அதற்கான நேரம் வந்துவிட்டது.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்