கோவையில் டிரோன் பறக்க 4 நாட்கள் தடை

2 நாட்கள் பயணமாக துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் நாளை தமிழகம் வர உள்ளார்.;

Update:2025-10-27 08:34 IST

இந்திய துணை ஜனாதிபதி பதவி வகித்து வந்த ஜெகதீப் தன்கர், கடந்த ஜூலை மாதம் 21-ந் தேதி, தனது பதவியை ராஜினாமா செய்தார். அதனை தொடர்ந்து புதிய துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் செப்டம்பர் 9-ந் தேதி நடைபெற்றது. அதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்ட சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்று, துணை ஜனாதிபதியாக பதவியேற்றார்.

துணை ஜனாதிபதி சி.பிராதாகிருஷ்ணன், தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தில் பிறந்தவர் ஆவார். இதனிடையே 2 நாட்கள் பயணமாக சி.பி.ராதாகிருஷ்ணன் நாளை தமிழகம் வர உள்ளார்.

நாளை கோவை சி.பி.ராதாகிருஷ்ணன் கோவையில் பாஜக சார்பில் நடைபெறும் பாராட்டு விழாவில் கலந்துகொள்கிறார். நாளை மறுநாள் சொந்த ஊரான திருப்பூரில் தனது தாயாரை சந்தித்து ஆசி பெறுகிறார்.

இந்நிலையில், கோவைக்கு நாளை துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வர உள்ள நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக மாவட்டத்தில் இன்று முதல் 30ம் தேதி வரை 4 நாட்கள் டிரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக திருப்பூரிலும் நாளை, நாளை மறுநாள் 2 நாட்கள் டிரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்