தலைமைப்பதவியில் 25 ஆண்டுகால பயணம்: பிரதமர் மோடிக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

பிரதமர் மோடிக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.;

Update:2025-10-08 10:35 IST

சென்னை,

பிரதமர் மோடி, குஜராத் முதல்-மந்திரியாக பதவி வகித்து, பின்னர் பிரதமராக பொறுப்பேற்று நேற்றுடன் 25 ஆண்டுகள் ஆகிறது. மேலும் இந்த வாய்ப்புக்காக இந்திய மக்களுக்கு அவர் நன்றி தெரிவித்துக்கொண்டார். 2001-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி அவர் குஜராத் முதல்- மந்திரியாக பதவியேற்றார். அப்போது முதல் தற்போது வரை அவரது பயணம் பற்றிய விவரங்களை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த நிலையில், தலைமைப்பதவியில் 25 ஆண்டுகாலம் நிறைவு செய்த பிரதமர் மோடிக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

“ 25 ஆண்டுகளாக அரசியலமைப்பு சட்டத் தலைவராக தொடர்ந்து பதவி வகித்து வரலாற்றுச் சாதனை படைத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு அதிமுக சார்பில் மனமார்ந்த வாழ்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த இணையற்ற மைல்கல், உங்கள் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமைத்துவம், அரசியல் சாதுர்யம் மற்றும் ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதற்கும், தேசத்திற்கு நேர்மையுடன் சேவை செய்வதற்கும் உறுதியான அர்ப்பணிப்புக்கு சான்றாக நிற்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்