தஞ்சாவூர் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை

அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.;

Update:2026-01-07 08:56 IST

கோப்புப்படம்


தஞ்சை கலெக்டர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில் கூறியிருந்ததாவது:-

ஒவ்வொரு ஆண்டும் தஞ்சை மாவட்டம் திருவையாறில் நடக்கும் தியாகராஜர் ஆராதனை விழாவுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படும். அதன்படி இந்த ஆண்டு திருவையாறு தியாகராஜர் 179-வது ஆராதனை விழாவினை முன்னிட்டு இன்று (புதன்கிழமை) ஒருநாள் மட்டும் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

இந்த உள்ளூர் விடுமுறை நாளுக்கு வருகிற 24-ந்தேதி (சனிக்கிழமை) தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் பணி நாளாக அறிவிக்கப்படுகிறது. இந்த உள்ளூர் விடுமுறை செலவாணி முறிச்சட்டம் 1881-ன் கீழ் வராது என்பதால் தஞ்சை மாவட்ட கருவூலம் மற்றும் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளை கருவூலகங்களும் குறிப்பிட்ட பணியாளர்களுடன் இயங்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. 

Tags:    

மேலும் செய்திகள்