‘லாபம் ஈட்டும் நிறுவனமாக கல்வியை கருதக் கூடாது’ - ஐகோர்ட்டு கருத்து

கூடுதல் வகுப்பு நடத்துவது கட்டாயம் அல்ல என்றபோது, அதற்கு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்ற தேவை இல்லை என நீதிபதிகள் தெரிவித்தனர்.;

Update:2025-11-17 18:43 IST

சென்னை,

சென்னை, கேளம்பாக்கத்தில் இயங்கி வரும் தனியார் பல்கலைக்கழகத்தில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறி மாணவர்கள் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், அனைத்து நிகர்நிலை பல்கலைகழகங்களும், கட்டண நிர்ணய குழு நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே வசூலிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக அரசு, பல்கலைகழக மானிய குழு மற்றும் தேசிய மருத்துவ ஆணையத்திற்கு உத்தரவிட்டனர்.

கூடுதல் வகுப்பு நடத்துவது கட்டாயம் அல்ல என்றபோது, அதற்கு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்ற தேவையே இல்லை என்று குறிப்பிட்ட நீதிபதிகள், லாபம் ஈட்டும் நிறுவனமாக கல்வியை கருதக் கூடாது என்று கருத்து தெரிவித்தனர். மேலும் இந்த வழக்கில், மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்காமல் சான்றிதழ்களை திரும்ப ஒப்படைக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Full View
Tags:    

மேலும் செய்திகள்