கோவை, நீலகிரிக்கு மே 30ம் தேதி வரை அதி கனமழை எச்சரிக்கை

கோயம்புத்தூர் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரியின் ஒரு சில இடங்களில் கன முதல் அதிகனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.;

Update:2025-05-26 16:50 IST

சென்னை,

தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு முன் கூட்டியே தொடங்கியது. அதைத்தொடர்ந்து தமிழகத்திலும் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு 2 நாட்கள் அதி கனமழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. நேற்று நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தில் கனமழை கொட்டித்தீர்த்தது. கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் அவ லாஞ்சி பகுதியில் அதிகபட்ச மாக 35 செ.மீ. மழை பெய்தது. கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள சின்னக்கல்லாரில் 21 செ.மீ. மழை பதிவாகி இருந்தது.

மாவட்டத்தில் உள்ள நொய்யல் ஆறு, வால்பாறை கூழாங்கல் ஆறு, நடுமலை ஆறு, பவானி ஆறு, ஆழியாறு போன்றவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணை மற்றும் சிறுவாணி அணை, ஆழியார் அணைகளின் நீர்மட்டமும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

பில்லூர் அணையில் நேற்று திடீரென நீர்மட்டம் 97 அடியாக உயர்ந்தது. நீர் வரத்து அதிகரிப்பால் அணையில் இருந்து 18 ஆயி கன அடி நீர் திறக்கப்பட்டது. வெளியேறி தண்ணீர் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது.

அங்கு 50-க்கும் மேற்பட்ட மரங்கள் நடுரோட்டில் முறிந்து விழுந்துள்ளன. இதன் காரணமாக போக்குவரத்து கடுமையாக பாதிக்க பாதிக்கப் பட்டுள்ளது. பல கிராமங்களில் மின் இணைப்பும் துண்டிக்கப் பட்டு மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். சில இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. வீடுகளும் சேதம் அடைத்துள்ளன.

காட்டிக்கு சுற்றுலா வந்த வயது சிறுவன் ஒருவன் நேற்று மரம் முறிந்து விழுந்ததில் பலியானான் இதைததொடர்ந்து முன் எச்சரிக்கை ஊட்டியில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டு உள்ளன. சுற்றுலா பயணிகளும் தாங்களாகவே நீல கிரியில் இருந்து வெளி யேறி வருகிறார்கள்.

இன்று 2-வது நாளாக கோலை, நீலகிரி மாவட்டத்துக்கு சிவப்பு நிற நிற அதிகனமழை எச்சரிக்கை நீடிக்கிறது. இதனால் மழை பொழிவு மேலும் அதிகரிதது சேதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

கனமழை காரணமாக தென்காசி மாவட்டத்துக்கும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. அந்த மாவட்டத்தி லும் பல பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மழை கொட்டி மெயின் அருவி, ஐந்தருவி பழைய குற்றாலம் அருவிகளில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் 2-வது நாளாக அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடைவிதிப் பட்டது.

இந்தநிலையில், கோவை, நீலகிரியில் வரும் மே 30ம் தேதி வரை கன முதல் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கோயம்புத்தூர் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரியின் ஒருசில இடங்களில் கனமுதல் அதிகனமழை பெய்யகூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்கெங்கு கனமழை பெய்ய வாய்ப்பு

* திருப்பூர்

* திண்டுக்கல்

* விருதுநகர்

* ஈரோடு

* கிருஷ்ணகிரி

* தருமபுரி

உதகை, கூடலூரில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. தொடரும் கனமழையால் சோலையார் பகுதியில் மேற்கூரை உடைந்து வீடு சேதம் அடைந்தது. வீடுகளில் உள்ளவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். வால்பாறை சுற்றுவட்டாரப்பகுதிகளில் கனமழை தொடர்கிறது. வரட்டுப்பாறையில் மின்கம்பம் உடைந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. சித்தலூரில் 100 மீட்டர் நீள தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தது.

Tags:    

மேலும் செய்திகள்