சென்னையில் இருந்து கொச்சிக்கு புறப்பட்ட விமானம் அவசரமாக தரையிறக்கம்
நடுவானில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறால், சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.;
கோப்புப்படம்
சென்னை,
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தனியார் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதால் விமான நிலையத்தில் பரபரப்பு நிலவியது.
முன்னதாக சென்னையில் இருந்து கொச்சி செல்லும் ஸ்பைஜெட் பயணிகள் விமானம் இன்று காலை புறப்பட்டு சென்றது. அப்போது நடுவானில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறால், சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
விமானியின் துரித நடவடிக்கையால், விமானம் ஆபத்திலிருந்து தப்பியதோடு, விமானத்தில் பயணித்த 147 பயணிகள் உட்பட 155 பேர் நல்வாய்ப்பாக உயிர்தப்பினர். விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறை சரிசெய்யும் பணியில் பொறியாளர்கள் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.