ஓரினச்சேர்க்கைக்கு வற்புறுத்தி சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை - வாலிபர் போக்சோவில் கைது

நெல்லை அருகே சிறுவர்களை ஓரினச்சேர்க்கைக்கு வற்புறுத்தி பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2025-10-06 18:19 IST

கோப்புப்படம் 

நெல்லை அருகே சிவந்திபட்டியை சேர்ந்தவர் முத்துக்குமார் (22 வயது). இவர் அந்த பகுதியில் உள்ள மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவர்களை ஓரினச் சேர்க்கை செய்ய வற்புறுத்தியதாகவும், அதனை வீடியோ எடுத்து பரப்ப முயன்றதாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தை அறிந்த பொதுமக்கள் சிவந்திப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், முத்துக்குமார் தன்னுடன் 15 வயது மற்றும் 14 வயதுடைய 2 சிறுவர்களுடன் இணைந்து மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவர்களை ஓரினச்சேர்க்கைக்கு வற்புறுத்தி பாலியல் தொல்லை அளித்ததும், அதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பரப்ப முயன்றதும் தெரியவந்தது.

இதுகுறித்து பாளையங்கோட்டை அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மகளிர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி, முத்துக்குமார் மற்றும் அந்த 2 சிறுவர்கள் மீது போக்சோ சட்டம் உள்பட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து முத்துக்குமார் போலீசாரால் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், இந்த சம்பவத்தில் உடன் இருந்த 15 மற்றும் 14 வயது சிறுவர்கள் இருவரும் கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

இந்த சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா? என மகளிர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்