கோவில்பட்டியில் இளஞ்சிறாரை தாக்கி கொலை மிரட்டல்: 4 பேர் கைது

கோவில்பட்டியில் 17 வயது சிறுவன் புதுகிராமம் நாராயணகுரு தெருவில் சென்றபோது அங்கு நின்று கொண்டிருந்த இளஞ்சிறார் கும்பல் அந்த சிறுவனை மறித்து அவதூறாக பேசி தாக்கியுள்ளனர்.;

Update:2025-09-21 20:17 IST

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி தெற்கு புதுகிராமம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த 17 வயது சிறுவன் உடற்பயிற்சி கூடத்திற்கு செல்வதற்காக, தனது உறவினரின் மகனை அழைக்க புதுகிராமம் நாராயணகுரு தெருவில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த இளஞ்சிறார் கும்பல் அந்த சிறுவனை மறித்து அவதூறாக பேசி தாக்கியுள்ளனர்.

இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் கேட்டவுடன் அந்த கும்பல், சிறுவனுக்கு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு, தப்பி ஓடிவிட்டனர். இதில் காயமடைந்த சிறுவன் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 இளஞ்சிறார்களை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்