சென்னைக்கு நான்கு புதிய புறநகர் ரெயில் சேவைகள் அறிமுகம்
பயணிகளின் வசதிக்காக சென்னைக்கு நான்கு புதிய புறநகர் ரெயில் சேவைகளை தெற்கு ரெயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது.;
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
பயணிகளின் வசதிக்காக, தெற்கு ரயில்வேயின் சென்னை பிரிவு நான்கு புதிய புறநகர் ரெயில் சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது, இது மார்ச் 03, 2025 (திங்கட்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது.
1. மூர் மார்க்கெட்டில் இருந்து ஆவடிக்கு செல்லும் புதிய புறநகர் ரெயில் மூர் மார்க்கெட் வளாகத்தில் இருந்து காலை 11.15 மணிக்கு புறப்படும்.
2. ஆவடியில் இருந்து மூர் மார்க்கெட்டிற்கு செல்லும் புதிய புறநகர் ரெயில் ஆவடியில் இருந்து காலை 5.25 மணிக்கு புறப்படும்.
3. மூர் மார்க்கெட்டில் இருந்து கும்மிடிபூண்டிக்கு செல்லும் புதிய புறநகர் ரெயில் மூர் மார்க்கெட்டில் இருந்து இரவு 10.35 மணிக்கு புறப்படும்.
4. கும்மிடிபூண்டியில் இருந்து மூர் மார்க்கெட்டிற்கு செல்லும் புதிய புறநகர் ரெயில் கும்மிடிபூண்டியில் இருந்து காலை 9.10 மணிக்கு புறப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்படுள்ளது.