கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றியது மகிழ்ச்சி அளிக்கிறது: அண்ணாமலை
நீதிபதிகளைப் பற்றி நிறையும் சொல்லப் போவது இல்லை; குறையும் சொல்லப் போவது இல்லை என்று அண்ணாமலை கூறினார்.;
சென்னை,
சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜரான பிறகு அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
“கரூர் வழக்கு என்பது கட்சி சம்பந்தப்பட்டது அல்ல. 41 உயிர்கள் சம்பந்தப்பட்டது. கரூர் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டதில் மகிழ்ச்சி. கரூர் சம்பவத்தில் சீமான் பதற்றப்படுவது ஏன்? எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது ஸ்டாலின் சிபிஐ விசாரணை கோரினார். திருப்புவனம் கோவில் காவலாளி அஜித்குமார் வழக்கை சிபிஐக்கு கொடுத்தார்கள். அரசியல் செய்வது நாங்களா இல்லை ஸ்டாலினா? யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நீதிபதிகளைப் பற்றி நிறையும் சொல்லப் போவது இல்லை; குறையும் சொல்லப் போவது இல்லை. போலியாக மனு தாக்கல் செய்யப்பட்டதா என்பதை நீதிமன்றம் விசாரிக்க வேண்டும்,” என்றார். மேலும், டி.ஆர். பாலு தாக்கல் செய்த அவதூறு வழக்கு குறித்து பேசிய அண்ணாமலை, “நீதிமன்றத்தில் அடுத்த வாய்மொழி விசாரணையில் இருந்து நானே குறுக்கு விசாரணை நடத்தப் போகிறேன். நவம்பர் 11 ஆம் தேதி அடுத்த விசாரணை நடைபெற உள்ளது,” என்றார் .