பணிக்கு வராவிட்டால் சம்பளம் கிடையாது: இடைநிலை ஆசிரியர்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை

பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையிலும், இடைநிலை ஆசிரியர்கள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.;

Update:2026-01-08 09:26 IST

கோப்புப்படம்

சென்னை,

‘சம வேலைக்கு சம ஊதியம்’ என்ற ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் கடந்த மாதம் (டிசம்பர்) 26-ஆம் தேதி முதல் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அரையாண்டு விடுமுறை முடிந்து கடந்த 5-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறந்த நிலையிலும், இடைநிலை ஆசிரியர்கள் தங்கள் போராட்டத்தை விட்டபாடில்லை.

பேச்சுவார்த்தை நடத்தியும், உடன்பாடு எட்டப்படவில்லை. நேற்றும் தங்கள் போராட்டத்தை ஆசிரியர்கள் முன்னெடுத்தது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட சூழலில், ஆசிரியர்களின் இந்த போராட்டம் தொடர்பாக தொடக்கக் கல்வித்துறை அதிரடி நடவடிக்கைகளை கையில் எடுத்து இருக்கிறது.

அதாவது, பணிக்கு வராவிட்டால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ‘நோ ஒர்க் - நோ பே’ அடிப்படையில் ஊதியமில்லா விடுப்பாக (அதாவது சம்பளம் கிடையாது) கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். ஆசிரியர்களுக்கு (மருத்துவ காரணங்களால் மருத்துவ சான்றிதழ் அடிப்படையில் வர இயலாதவர்களைத் தவிர) வேறு எவ்வகையான விடுப்பும் அனுமதிக்கக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்