ராமேசுவரத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை
ராமேசுவரத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.;
சென்னை,
இலங்கை அருகே தென்மேற்கு வங்கக்கடலில் உருவான புயல் சின்னத்தை தொடர்ந்து, ராமேசுவரம் பகுதியில் கடந்த 2 நாட்களாகவே பலத்த காற்று வீசி வருவதுடன் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதற்கிடையில், ‘தித்வா’ புயல் வடதமிழகம் நோக்கி நகருகிறது. 9 மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தொடர் கனமழை காரணமாக ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் வட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவ.28) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 5-வது நாளாக இன்றும் ராமேசுவரம் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. படகுகள் அனைத்தும் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.