என் குழந்தைகளுக்கு நான் நேரம் செலவிடவில்லை: இளையராஜா
குழந்தைகளுக்காக செலவிடும் நேரம்தான் சிம்பொனியாக வந்துள்ளது என்று இளையராஜா கூறினார்.;
சென்னை,
தமிழ் திரை இசையை உலக அளவில் புகழ்பெற செய்த இசைஞானி இளையராஜா, திரை இசை உலகில் 50 ஆண்டுகளை கடந்ததையொட்டி அவருக்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடைபெற்று வருகிறது."சிம்பொனி – சிகரம் தொட்ட தமிழன் இசைஞானி இளையராஜா – பொன்விழா ஆண்டு 50" என்ற தலைப்பில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இந்த பாராட்டு விழா நடைபெற்றது. இதில் இளையாராஜா பேசியதாவது:
அரசு சார்பில் பாராட்டு விழா, மறக்க முடியாத தருணம். உலகிலேயே இசையமைப்பாளருக்கு பாராட்டு விழா தமிழக அரசால் மட்டுமே சாத்தியம். இசை உலக சரித்திரத்தில் இது ஒரு பெரிய விஷயமாக பார்க்கிறேன். என் மீது அனைவரும் அன்பு வைத்ததற்கு இசைதான் காரணம். "சிம்பொனி இசைக்க செல்வதற்கு முன்பு வீட்டுக்கே வந்து பாராட்டியவர் முதலமைச்சர்;
எனக்கு பாராட்டு விழா நடைபெறுவதை என்னால் நம்ப முடியவில்லை" நான் முதலாவது நன்றி தெரிவிக்க வேண்டியது எனது குழந்தைகளுக்குதான். எனது குழந்தைகளுக்காக நான் நேரம் செலவிட முடியவில்லை.குழந்தைகளுக்காக செலவிடும் நேரம்தான் சிம்பொனியாக வந்துள்ளது” இவ்வாறு அவர் கூறினார்.