தைரியம் இருந்தால் அண்ணாசாலை பக்கம் வாங்க: அண்ணாமலைக்கு உதயநிதி ஸ்டாலின் சவால்

தைரியம் இருந்தால் அண்ணாசாலை பக்கம் வர சொல்லுங்க என்று அண்ணாமலைக்கு உதயநிதி ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.;

Update:2025-02-20 12:55 IST

சென்னை,

சென்னையில் துணை முத-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

கல்வி நிதி திமுக - பாஜகவுக்கான பிரச்சினை இல்லை. தமிழ்நாட்டு நிதி உரிமைக்காக, அண்ணாமலையை எதையாவது செய்ய சொல்லுங்கள். மக்கள் பிரச்சினையை திசை திருப்ப அண்ணாமலை எதை எதையோ உளறி கொண்டு இருக்கிறார்.

தனியார் பள்ளி நடத்துபவர்களை பாஜக தலைவர் விமர்சிப்பதே தவறானது. தமிழ்நாட்டுக்கான கல்வி நிதியை மத்திய அரசிடம் பேசி பாஜக தலைவர் அண்ணாமலை வாங்கி தரச் சொல்லுங்கள். அண்ணா அறிவாலயத்திற்கு வருவதாக அண்ணாமலை சொன்னார்; தைரியம் இருந்தால் அவரை அண்ணாசாலைக்கு முதலில் வரச்சொல்லுங்க என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்