சட்ட விரோதமாக மது விற்றவர் கைது: 27 பாட்டில்கள் பறிமுதல்
நெல்லை மாநகர மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னராஜா மற்றும் போலீசார் ஊருடையார்புரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.;
திருநெல்வேலி மாநகர மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னராஜா மற்றும் காவல்துறையினர் ஊருடையார்புரம் பகுதியில் மதுவிலக்கு சம்பந்தமாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கே சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறையை சேர்ந்த சின்னராஜ் மகன் ஆனந்த் (வயது 32) என்பவரிடமிருந்து 27 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து, அவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.