கனிமொழி எம்.பி.யின் தாயார் ராசாத்தி அம்மாள் மருத்துவமனையில் அனுமதி

கனிமொழி எம்.பி.யின் தாயார் ராசாத்தி அம்மாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.;

Update:2025-10-16 15:36 IST

சென்னை,

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் மனைவி ராசாத்தி அம்மாள் சென்னை சி.ஐ.டி. காலனியில் உள்ள மகள் கனிமொழி உடன் வசித்துவருகிறார். இவருக்கு அண்மை காலமாகவே அஜீரண கோளாறு மற்றும் வயிற்று வலி பிரச்சினை இருந்து வருகிறது.

இதற்காக கடந்தாண்டு ஜெர்மனியில் உள்ள பிரபல மருத்துவமனைக்குச் சென்று 20 நாட்கள் தங்கி சிகிச்சை பெற்று இருந்தார். இந்தநிலையில், திடீர் உடல்நலக்குறைவு காரணமாக ராசாத்தி அம்மாள் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது என்றும் உரிய சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், சிகிச்சைக்குப் பின்னர் ராசாத்தி அம்மாளின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்