கரூர் சம்பவம்: 3 மாதத்தில் ஆணையம் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டது தொடர்பான விவரங்கள் அரசிதழல் வெளியிடப்பட்டுள்ளது.;

Update:2025-10-07 19:23 IST

சென்னை,

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கடந்த 27ந் தேதி கரூரில் தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது அளவுக்கு அதிகமாக மக்கள் கூடினா். இதனால் கூட்டநெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனா். இந்த சம்பவத்திற்கு திமுக தான் காரணம் என்று தவெகவும், தவெக தான் காரணம் என்று திமுகவும் குற்றம்சாட்டி வருகிறது. இதற்கிடையே பாஜக எம்.பி.க்கள் குழு சார்பில் உண்மை கண்டறிய கரூரில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், தமிழக அரசு சார்பில் ஓய்வுப்பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்திற்கு விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அருணா ஜெகதீசன், கரூரில் சென்று வேலுச்சாமிபுரத்தில் விசாரணை நடத்தி வருகிறார். இந்த நிலையில் கரூர் கூட்டநெரிசல் வழக்கில் விசாரணை நடத்தி 3 மாதங்களுக்குள் அறிக்கை சமர்பிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில்,

கரூர் சம்பவத்தை விசாரிக்கும் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் 3 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் வாரங்களில் நீதிபதி அருணா ஜெகதீசன் குழு மேலும் பல முக்கிய அதிகாரிகள் மற்றும் சாட்சியர்களை விசாரிக்க இருப்பதாகத் தெரிகிறது. இந்த விசாரணையின் முடிவுகள், தமிழக அரசின் நடவடிக்கைகள் மற்றும் வரவிருக்கும் தேர்தல் சூழ்நிலையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் வட்டாரங்கள் கணிக்கின்றன.

Tags:    

மேலும் செய்திகள்