தொலைதூரப் படிப்புகளில் ‘அரியர்' மாணவர்கள் தேர்ச்சி பெற கடைசி வாய்ப்பு: சென்னை பல்கலைக்கழகம் தகவல்
1981-82-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரையில் தொலைதூரப் படிப்புகளில் படித்து ‘அரியர்’ வைத்திருக்கும் மாணவர்கள் அந்தப் பாடங்களில் தேர்ச்சி பெறுவதற்கு கடைசி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.;
1981-82-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரையில் தொலைதூரப் படிப்புகளில் படித்து ‘அரியர்’ வைத்திருக்கும் மாணவர்கள் அந்தப் பாடங்களில் தேர்ச்சி பெறுவதற்கு கடைசி வாய்ப்பு வழங்கப்படுவதாக சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அதன்படி இளங்கலை, முதுகலை, பி.எல்.ஐ.எஸ்., எம்.எல்.ஐ.எஸ். பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ, சான்றிதழ் படிப்புகளுக்கான தேர்வு டிசம்பர் மாதம் நடக்கிறது. இந்த தேர்வுக்கு www.ideunom.ac.in என்ற இணையதளத்தில் வருகிற 10-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.