ராமநாதபுரம் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.;
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் உலக பிரசித்தி பெற்ற மஹான் சுல்தான் செய்யது இப்ராகிம் ஷஹீத் ஒலியுல்லாஹ் தர்கா உள்ளது. இந்த தர்காவில் ஆண்டுதோறும் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக சந்தனக்கூடு திருவிழா நடைபெறும்.
அதன்படி, ஏர்வாடி தர்காவில் 851-ம் ஆண்டு மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா இன்று (புதன்கிழமை) மாலை தொடங்கி நடைபெறுகிறது. நாளை(வியாழக்கிழமை) அதிகாலையில் சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. சந்தனக்கூடு திருவிழாவில் பங்கேற்க பல்லாயிரக்கணக்கானோர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு பல்வேறு முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், ஏர்வாடி தர்காவில் நடைபெறும் சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்திற்கு நாளை (வியாழக்கிழமை) ஒருநாள் உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் ஜீத் சிங் காலோன் உத்தரவிட்டுள்ளார்.