சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்

மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.;

Update:2025-05-26 11:32 IST

கோப்புப்படம் 

தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

சென்னையில் நாளை (27.05.2025) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

குமணன்சாவடி: அம்பாள் நகர், பூந்தமல்லி நெடுஞ்சாலை, பாரிவாக்கம், பானவீடு தோட்டம், பிடரிதாங்கல், கோலப்பன்சேரி.

ஜெ.ஜெ.நகர்: நொளம்பூர் எரி திட்டம் 1, 5, 6, மற்றும் 10-வது பிரதான சாலை ,திவ்யம் குடியிருப்புகள், பஜனை கோயில் தெரு, பனியன், ஆதித்யா என்கிளேவ், ட்ரை ஸ்டார் அபார்ட்மென்ட், ஏ.கே.ஆர்.நகர், வி.ஜி.என் பெர்னாண்டேல், வி.ஜி.என் அவென்யூ. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்