நெல்லையில் தடுப்பு சுவரில் மோதிய லாரி தலை கீழாக கவிழ்ந்து விபத்து
டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரியானது எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளானது.;
திருநெல்வேலி,
சரக்கு இறக்கிவிட்டு வந்த கனரக லாரி ஒன்று நெல்லை மாவட்டம் பணகுடி மற்றும் வள்ளியூருக்கு இடையே நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக லாரியானது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதன் விளைவாக லாரி சாலை அருகே உள்ள தடுப்பு சுவரில் மோதி தலைக்குப்பர கவிழ்ந்தது.
இந்த விபத்தில் சிக்கிய லாரி டிரைவர் சங்கர் படுகாயமடைந்தார். இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவத்தால் நான்கு வழிச்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு பணகுடி போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
முதற்கட்ட விசாரணையில் நெல்லையில் இருந்து கருங்கற்களை ஏற்றிக்கொண்டு கேரளாவில் இறக்கிவிட்டு திரும்பியபோது இந்த விபத்து நிகழ்ந்திருப்பது தெரியவந்துள்ளது.