பராமரிப்பு பணி: சென்னையில் நாளை மின்தடை

சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் நாளை மதியம் 2 மணிக்குள் மின்வாரிய பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.;

Update:2025-05-31 13:00 IST

தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

சென்னையில் நாளை (1.6.2025) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

அதன்படி அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் குளக்கரை தெரு, மாரியம்மன் கோயில் தெரு, வடக்கு கட்டம் சிட்கோ 5 முதல் 7 வரை, பொன்னியம்மன் கோயில் 11 முதல் 13 வரை, இபி சாலை 1 முதல் 4வரை, 2வது பிரதான சாலை ஆகிய இடங்களில் நாளை (1.6.2025) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்