மனைவி மீது டீசல் ஊற்றி தீ வைத்தவர் கைது
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பகுதியில் கணவன், மனைவி குடும்பப் பிரச்சினை காரணமாக ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த கணவன், மனைவி மீது டீசல் ஊற்றி தீ வைத்துள்ளார்.;
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே கண்டியூர் கிராமத்தைச் சேர்ந்த ஆதித்யன் (வயது 28) என்பவருக்கும், அவரது காதல் மனைவி பிரேமாவிற்கும்(24) இடையே சில மாதங்களாக குடும்பப் பிரச்சினை இருந்து வந்துள்ளது. நேற்று முன்தினம் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த ஆதித்யன், பிரேமா மீது டீசல் ஊற்றி தீ வைத்துள்ளார்.
இதில் படுகாயமடைந்த பிரேமா திருவாரூர் அரசு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின்பேரில் குத்தாலம் போலீசார் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, ஆதித்யனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.