நெல்லையில் 6 கோழிகள் திருடியவர் கைது
பழவூர், பால் பண்ணை தெருவைச் சேர்ந்த மாரிமுத்து, சுத்தமல்லியைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன் வீட்டில் கோழிகளை திருடியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.;
நெல்லை மாவட்டம், சுத்தமல்லி, செந்திஅம்மன் கோவில் தெருவை சேர்ந்த நவநீதகிருஷ்ணன் (வயது 66), தனது வீட்டின் தோட்டத்தில் 6 கோழிகளை வளர்த்து வந்துள்ளார். 25.04.2025 அன்று இரவு கோழிகளை கூட்டில் அடைத்துவிட்டு சென்றுள்ளார். பின்பு மறுநாள் காலை வந்து பார்த்தபோது 6 கோழிகளை காணவில்லை. இதுகுறித்து நவநீதகிருஷ்ணன் சுத்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தார். விசாரணையில் பழவூர், பால் பண்ணை தெருவைச் சேர்ந்த மாரிமுத்து (47) என்பவர் கோழிகளை திருடியது தெரியவந்தது. இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதன், மாரிமுத்துவை நேற்று முன்தினம் (29.04.2025) கைது செய்தார். மேலும் அவரிடமிருந்து 6 கோழிகள் பறிமுதல் செய்யப்பட்டது.