தூத்துக்குடியில் நாய்களுக்கு தடுப்பூசி போடும் பணி: மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தார்

தூத்துக்குடியில் தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறையும், தூத்துக்குடி மாநகராட்சியும் இணைந்து நாய்களுக்கு ரேபிஸ் வெறிநாய் தடுப்பூசி போடும் முகாமினை நடத்தினர்.;

Update:2025-09-28 21:36 IST

தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் தூத்துக்குடி மாநகராட்சியும் இணைந்து மாநகர பகுதிகளில் நாய்களுக்கு ரேபிஸ் வெறிநாய் தடுப்பூசி போடும் முகாமினை புதிய பேருந்து நிலையத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தார்.

மேலும் அவர், மாநகர மக்கள் தங்கள் வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களுக்கு தடுப்பூசிகள் போட வேண்டுமென்றால் மாநகராட்சியின் கட்டணமில்லாத இந்த 18002030401 எண்ணை தொடர்பு கொண்டால் உங்கள் அருகிலுள்ள மாநகராட்சி பூங்காக்கள் மாநகர மக்கள் கூடும் இடங்கள் ஆகிய பகுதிகளிலும் தெருக்களுக்களிலும் நேரடியாக வந்து ஊசிகள் போடப்படும் என்று தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி கமிஷனர் பிரியங்கா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்