நயினார் நாகேந்திரன் பிறந்தநாள்: எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
நயினார் நாகேந்திரனுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.;
சென்னை,
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று தனது 65வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு கட்சி தொண்டர்கள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நயினார் நாகேந்திரனுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
இன்று பிறந்தநாள் காணும் தமிழக பாஜக தலைவர், திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் அன்புச் சகோதரர் நயினார் நாகேந்திரன் அவர்களுக்கு எனது இதயங்கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
நீண்ட ஆயுள், உடல் நலத்துடன் தொடர்ந்து மக்கள் சேவையாற்றிட எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.என தெரிவித்துள்ளார்.