நீட் தேர்வு - தமிழகத்தில் 76,181 மாணவர்கள் தேர்ச்சி

தமிழ்நாட்டில் 26,580 மாணவர்கள் தமிழ் வழி கேள்வித்தாள் மூலமாக நீட் தேர்வு எழுதினர்.;

Update:2025-06-14 15:13 IST

கோப்புப்படம் 

புதுடெல்லி,

நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளில் சேருவதற்காக நடத்தப்பட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வான 'நீட்-யூஜி 2025' தேர்வை சுமார் 20 லட்சம் மாணவர்கள் எழுதினர். இந்தத் தேர்விற்கான தற்காலிக விடைக் குறிப்பை தேசிய தேர்வு முகமை கடந்த 3ம் தேதி வெளியிட்டது.

இந்நிலையில், நீட்-யூஜி 2025 தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை தற்போது இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் 22,09,318 மாணவர்கள் நீட் தேர்வு எழுதியதில், 12,36,531 மாணவர்கள் தகுதி மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.

தமிழகத்தை பொறுத்தவரை, 1,35,715 மாணவர்கள் நீட் தேர்வு எழுதினர். இதில் 76,181 மாணவர்கள் தகுதி மதிப்பெண்களை பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் 26,580 மாணவர்கள் தமிழ் வழி கேள்வித்தாள் மூலமாக நீட் தேர்வு எழுதினர்.

 

Tags:    

மேலும் செய்திகள்