நேரு சுதந்திர இந்தியாவிற்கு வலுவான அடித்தளத்தை அமைத்தார்: செல்வப்பெருந்தகை

இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு நினைவு நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன் என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.;

Update:2025-05-27 12:01 IST

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:

"இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் நினைவு நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்.

வலுவான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய இந்தியா என்ற கனவுடன், நேரு தனது தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமையின் மூலம் சுதந்திர இந்தியாவிற்கு வலுவான அடித்தளத்தை அமைத்தார்.

சமூக நீதி, நவீனத்துவம், கல்வி, அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தை நிறுவுவதில் அவரது பங்களிப்பு மிகச்சிறந்தது.

பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் சிந்தனையும், கொள்கைகளும் எப்போதும் நம்மை வழிநடத்தும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்