பாமக எம்எல்ஏ அருளுக்கு புதிய பொறுப்பு - ராமதாஸ் உத்தரவு
அருள் எம்.எல்.ஏ.வுக்கு கட்சியில் புதிய பொறுப்பை வழங்கி அறிவிப்பு வெளியாகியுள்ளது.;
சென்னை,
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி இடையே பிரச்சினை நிலவி வருகிறது. பாமக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் ஒரு தரப்பினர் ராமதாசுக்கும், மற்றொரு தரப்பினர் அன்புமணிக்கும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் ஆதரவாளரான எம்.எல்.ஏ. அருளுக்கு கட்சியில் புதிய பொறுப்பை வழங்கி அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாநில இணைப் பொதுச் செயலாளர் இரா. அருள் எம்.எல்.ஏ. பாமகவின் தலைமை செய்தித் தொடர்பாளராக இன்று (21ஆம் தேதி) முதல் நியமிக்கப்படுகிறார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.