சிரியா தலைநகர் டமாஸ்கசில் அதிபர் மாளிகைக்குள் கிளர்ச்சியாளர்கள் நுழைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதிபர் பஷார் அல் -ஆசாத் தப்பிச்சென்ற நிலையில், கிளர்ச்சியாளர்கள் நுழைந்துள்ளனர்.
அடிலெய்டு டெஸ்ட்: இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
திருவண்ணாமலையில் மண்சரிவு ஏற்பட்டு 7 பேர் பலியான நிலையில், வல்லுநர் குழு ஆய்வு தொடங்கியுள்ளது. சுரங்கத்துறை ஆணையர் சரவணன் வேல்சாமி தலைமையில் 9 பேர் கொண்ட குழு மலை மீது ஆய்வு செய்து வருகிறது. குழுவில் மண் இயக்கவியல் அடித்தள பொறியியல்துறை, சுரங்கத்துறை உள்ளிட்ட நிபுணர்கள் இடம்பெற்றுள்ளனர்.
திருவண்ணாமலை தீபமலையின் மண்ணின் தன்மை ஆய்வு செய்து இன்று நண்பகலுக்கு மேல் அறிக்கை அளிப்பார்கள்.13-ம் தேதியன்று மகாதீபத்தன்று பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்களா? - ஆய்வுக்குப் பின் தெரியும். மலையில் ஆங்காங்கே மரத்தில் பாறைகள் தொங்குவதாகவும் புதைகுழிகள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. பெரும் பாதை என அழைக்கப்படும் முலைப்பால் தீர்த்தம் வழியாக பக்தர்கள் செல்லும் பாதையிலும் மண் சரிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்த்துள்ளது.
புதிதாக ஒரு கூட்டணியில் சேர வேண்டிய அவசியம் விசிகவுக்கு ஏற்படவில்லை என்று திருமாவளவன் கூறியுள்ளார். மதுரையில் பேட்டி அளித்த அவர் மேலும் கூறியதாவது:- விசிகவில் யார் தவறு செய்தாலும் முகாந்திரத்தை ஆய்வு செய்த பிறகே நடவடிக்கை எடுக்கப்படும். ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுப்பது குறித்து விரைவில் அறிவிப்போம். நானும் விஜய்யும் ஒரே மேடையில் நின்றால் அதை வைத்து அரசியல் சூதாட்டம் நடத்த சதி நடைபெற்றது” என்று கூறினார்.
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும்,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை இன்று நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும்
சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் புழல் ஏரிக்கு நீர் வரத்து முற்றிலுமாக நின்றது. 209 கன அடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில், மழை நின்றதால் நீர் வரத்தும் நின்றது. 3,300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் எரியில் தற்போது நீர் இருப்பு அளவு 2768 கன அடியாக உள்ளது.21 அடி உயரம் கொண்ட புழல் ஏரியில் தற்போது 18.79 அடி உயரத்துக்கு நீர் இருப்பு உள்ளது
மகளிர் ஒருநாள் கிரிக்கெட்: இந்திய அணிக்கு இமாலய இலக்கு நிர்ணயித்த ஆஸ்திரேலியா
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இன்று நடைபெற்று வரும் 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி 371 ரன்கள் அடித்தது. இதையடுத்து 372 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய மகளிர் அணி பேட்டிங் செய்து வருகிறது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 14 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விசாகப்பட்டினத்தில் இருந்து கஞ்சாவை எடுத்து வந்ததாக கேரளாவை சேர்ந்த சுகில் (வயது 27), ராம்ஷீட் (28) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.