சிரியாவில் நீடிக்கும் பதற்றம்; மத்திய வங்கி சூறை
சிரியாவில் தொடர்ந்து நீடிக்கும் பதற்றத்தின் இடையே அந்நாட்டின் மத்திய வங்கி சூறையாடப்பட்டது. தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள மத்திய வங்கியில் நுழைந்த கிளர்ச்சியாளர்கள் வங்கிப் பணத்தை மூட்டை கட்டி கொண்டு கார்களில் எடுத்து சென்றனர்.
பிரிஸ்பேனில் நடைபெற்ற இன்று 2வது ஒருநாள் போட்டியில் இந்திய பெண்கள் அணியை 122 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய பெண்கள் அணி அபார வெற்றிபெற்றது.
திமுக கூட்டணி கணக்கு மைனஸ் ஆகும் என விஜய் பேசியது நடந்தால் அவர் வாயில் சர்க்கரை போடுவேன் என்று நடிகை கஸ்தூரி கூறியுள்ளார். மேலும், திருமாவளவன் கூட்டணியில் இருந்து வெளியே வருவாரா என்று தெரியவில்லை எனவும் உதயநிதிக்கு தரக்குறைவாக பேசுவது ஒன்றும் புதிது அல்ல எனவும் கூறினார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து அணி. 3 போட்டிகள் கொண்ட தொடரில் 0-2 என முன்னிலை பெற்றுள்ளது. 2-வது டெஸ்ட் போட்டியில் 323 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இங்கிலாந்து.
ஷம்பு எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள், டெல்லியை நோக்கி முன்னேறி வருகிறார்கள். விவசாயிகளை தடுக்கும் விதமாக அவர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியுள்ளனர். இதனால், டெல்லி எல்லையில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.
தமிழகத்தில் வரும் 10 ஆம் தேதி முதல் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலோரம் மற்றும் உள் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது.
பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ தமிழ்நாடு முதல் அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரு.10 லட்சம் வழங்க விசிக முடிவு செய்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
முதல் அமைச்சர் ஸ்டாலின் வரும் 11ஆம் தேதி கேரளா செல்கிறார்.12-ஆம் தேதி கேரள மாநிலம் கோட்டயத்தில் நடைபெற உள்ள வைக்கம் போராட்ட நூற்றாண்டு நிறைவு விழாவில் பங்கேற்கிறார்.ரூ.8.5 கோடியில் புனரமைக்கப்பட்ட பெரியார் நினைவகம், நூலகத்தை முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் புகைப்பட கண்காட்சிக் கூடம், நூலகம், சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. பெரியார் நினைவகம் மற்றும் நூலகம் திறப்பு விழாவுக்கு அம்மாநில முதல் மந்திரி பினராயி விஜயன் தலைமை தாங்குகிறார்