சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சி கவிழ்ந்துவிட்டதாக தகவல்வெளியாகி உள்ளது. சிரியா தலைநகரில் போராளி குழுக்கள் நுழைந்ததால் ஆசாத் தப்பி ஓடி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மன வளர்ச்சி குன்றிய கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் சுரேஷ் மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
வங்க கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வரும் 11 ஆம் தேதி இலங்கை- தமிழ்நாடு இலங்கை கடற்கரையை நெருங்க உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது வங்க கடல் மற்றும் அதை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நீடிக்கிறது.
தமிழக மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டு இருந்த மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. மீனவர்களின் 2 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.