அன்புமணியுடன் பா.ம.க எம்.எல்.ஏக்கள் சந்திப்பு

சென்னை பனையூரில் உள்ள அன்புமணியின் வீட்டில் இந்த சநதிப்பு நடைபெற்று வருகிறது;

Update:2025-05-31 11:41 IST

சென்னை,

பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணியை மத்திய அமைச்சராக்கியது தவறு என்றும் பொதுக்குழுவை கூட்டி அவரை நீக்குவேன் என்பன உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காக வைத்தார். தைலாபுரத்தில் ராமதாஸ் அளித்த பேட்டி பாமகவினர் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. உட்கட்சி மோதலில் அடுத்து என்ன நடக்கும் என்று கேள்விகள் எழுந்திருக்கும் சூழலில், கட்சியின் மாவட்ட தலைவர்கள், மாவட்ட செயலாளர்களை உள்ளிட்டோரை நேற்று சந்தித்து அன்புமணி ஆலோசனை நடத்தினார்.

இந்த நிலையில், அன்புமணி ராமதாஸை பாமக எம்.எல்.ஏ.க்கள் இன்று சந்தித்துள்ளனர் . சென்னை பனையூரில் உள்ள அன்புமணியின் வீட்டில் இந்த சநதிப்பு நடைபெற்று வருகிறது.  தர்மபுரி எம்.எல்.ஏ. வெங்கடேசன் , மேட்டூர் எம்.எல் ஏ சதாசிவம் அன்புமணியுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்