கல்குவாரிக்கு எதிராக போராட்டம்; அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கைது
பொதுமக்கள் 300க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்.;
மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே திருமால் கிராமத்தில் கல்குவாரி அமைக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனிடையே, கல்குவாரி அமைக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், கல்குவாரி அமைக்க வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யக்கோரி அதிமுக முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஆர்.பி. உதயகுமார் தலைமையில் மதுரை கலெக்டர் அலுவலகம் முன் இன்று திருமால் கிராம மக்கள் 300க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட ஆர்.பி. உதயகுமார், பொதுமக்கள் என 300க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்.