திருவொற்றியூரில் ரவுடி வெட்டிக்கொலை.. மர்ம கும்பல் வெறிச்செயல்

கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை வைத்து கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.;

Update:2025-12-11 06:49 IST


சென்னை எண்ணூர் சுனாமி குடியிருப்பு 29-வது பிளாக்கை சேர்ந்தவர் சத்யா (வயது 24). பிரபல ரவுடியான இவர் மீது கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது. எண்ணூர் போலீஸ் நிலையத்தில் பி பிரிவு சரித்திர பதிவேடு குற்றவாளியாக சத்யா உள்ளார். 2 ஆண்டுகளுக்கு முன்பு எண்ணூர் பகுதியில் விஜய் என்பவர் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான இவர் நேற்று இரவு திருவொற்றியூர் திருச்சிணாங்குப்பம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது 8 பேர் கொண்ட கும்பல் மோட்டார் சைக்கிளில் சத்யாவை பின்தொடர்ந்து விரட்டினர். அவர்களிடமிருந்து தப்பிக்க சத்யா திருச்சிணாங்குப்பம் அடுக்கு மாடி குடியிருப்பு பகுதியில் நுழைந்தார். விடாமல் துரத்திய மர்ம கும்பல் சத்யாவை சரமாரியாக வெட்டி சாய்த்து விட்டு தப்பிச்சென்றனர். இதில் தலையில் பலத்த வெட்டு காயம் அடைந்த சத்யா அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.

கொலை குறித்து தகவல் அறிந்த திருவொற்றியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உயிரிழந்த சத்யா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை வைத்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்