சென்னை விமான நிலையம் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது - அதிகாரி தகவல்
சென்னை விமான நிலையத்தின் செயல்பாட்டில் மகிழ்ச்சியடைகிறார்கள் என்று அதிகாரி தெரிவித்தார்.;
சென்னை,
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான சேவை பாதிப்பு குறித்து மத்திய விமான போக்குவரத்து துறை துணை செயலாளர் அம்புஜ் சர்மா ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
சென்னை விமான நிலையம் இயல்பு நிலைக்கு வேகமாக முன்னேறி வருகிறது. இந்தப் பிரச்சினையை ஒரே நாளில் தீர்க்க முடியாது. இயல்புநிலை திரும்புவதை உறுதிசெய்ய அதிகாரிகள் 24 மணி நேரமும் உழைத்து வருகின்றனர். பயணிகள் கருத்துகளை பெற்றோம். சென்னை விமான நிலையத்தின் செயல்பாட்டில் மகிழ்ச்சியடைகிறார்கள்.
சில பகுதிகளை மேம்படுத்தப்படுத்த கோரிக்கை வைத்து உள்ளார்கள். இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளது. இறுதி அறிக்கை இண்டிகோ நிறுவனம் தரவில்லை. இண்டிகோ நிறுவனம் தங்கள் விமான அட்டவணையை 10 சதவீதம் குறைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
விமான நிலைய இயக்குனர் ராஜா கிஷோர் கூறுகையில், ‘விமான சேவைகள் தற்போது இயல்பு நிலைக்கு வந்து கொண்டு இருக்கின்றன. பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து 9-ந்தேதி 53 ஆயிரமாக உயர்ந்து உள்ளது. முனையங்களை மேம்படுத்தி பயணிகள் வசதிகளை செய்து வருகிறோம்’ என கூறினார்.