கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு சேலம் வழியாக சிறப்பு ரெயில்கள் இயக்கம்
பண்டிகை காலங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் முக்கிய வழித்தடங்களில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.;
சேலம்,
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு சேலம் வழியாக சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
பண்டிகை காலங்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் ரெயில்வே நிர்வாகம் முக்கிய வழித்தடங்களில் சிறப்பு ரெயில்களை இயக்கி வருகிறது. அந்த வகையில் தற்போது கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு ஹூப்ளியில் இருந்து சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக திருவனந்தபுரத்திற்கு சிறப்பு ரெயில் இயக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி ஹூப்ளி-திருவனந்தபுரம் சிறப்பு ரெயில் (வண்டி எண்: 07361) வருகிற 23-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) ஹூப்ளியில் இருந்து காலை 6.55 மணிக்கு புறப்பட்டு பங்காருபேட்டை வழியாக இரவு 9.30 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 9.33 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக மறுநாள் காலை 10.30 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும்.
இதேபோல் திருவனந்தபுரம்-எஸ்.எம்.வி.டி. பெங்களூரு சிறப்பு ரெயில் (07362) வருகிற 24-ந் தேதி (புதன்கிழமை) திருவனந்தபுரத்தில் இருந்து மதியம் 12.40 மணிக்கு புறப்பட்டு போத்தனூர், திருப்பூர், ஈரோடு வழியாக மறுநாள் நள்ளிரவு 12.17 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 12.20 மணிக்கு புறப்பட்டு காலை 5.50 மணிக்கு எஸ்.எம்.வி.டி. பெங்களூரு சென்றடையும்.
பெங்களூரு-கொல்லம்
அந்த வகையில் எஸ்.எம்.வி.டி. பெங்களூரு-கொல்லம் சிறப்பு ரெயில் (06561) வருகிற 27-ந் தேதி (சனிக்கிழமை) மதியம் 3 மணிக்கு எஸ்.எம்.வி.டி. பெங்களூருவில் இருந்து புறப்பட்டு பங்காருபேட்டை வழியாக இரவு 8 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 8.03 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக மறுநாள் காலை 7.25 மணிக்கு கொல்லம் சென்றடையும்.
கொல்லம்-ஹூப்ளி சிறப்பு ரெயில் (06562) வருகிற 28-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொல்லத்தில் இருந்து காலை 10.40 மணிக்கு புறப்பட்டு போத்தனூர், திருப்பூர், ஈரோடு வழியாக இரவு 9.27 மணிக்கு சேலம் வந்தடையும், இங்கிருந்து 9.30 மணிக்கு புறப்பட்டு பங்காருபேட்டை வழியாக மறுநாள் காலை 10.30 மணிக்கு ஹூப்ளி சென்றடையும். இந்த தகவலை சேலம் ரெயில்வே கோட்ட அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.