குமரி: சிறுமியிடம் பாலியல் அத்துமீறல் - எலக்ட்ரீசியன் கைது

வீட்டில் விடுவதாக கூறி சிறுமியை இருளான பகுதிக்கு அழைத்துச் சென்றார்.;

Update:2025-12-11 04:15 IST

குமரி,

குமரி மாவட்டம் கருங்கல் அருகே உள்ள மாங்கரை பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ்(வயது57), எலக்ட்ரீசியன். இவருடைய மனைவி வீட்டில் வைத்து டியூசன் நடத்தி வருகிறார். அங்கு 3-ம் வகுப்பு படிக்கும் 8 வயது சிறுமி ஒருவரும் படித்து வந்தார். இந்தநிலையில் சம்பவத்தன்று இரவு டியூசன் முடிந்த நிலையில் அந்த சிறுமியை அழைத்துச்செல்ல பெற்றோர் வெகுநேரமாக வரவில்லை என தெரிகிறது.

இதனால் பால்ராஜ் அந்த சிறுமியை வீட்டில் விடுவதற்காக அழைத்துச் சென்றார். அப்போது இருளான பகுதிக்கு சிறுமியை கொண்டு சென்று அவர் அத்துமீறியதாக தெரிகிறது. அதிர்ச்சி அடைந்த சிறுமி சத்தம் போடவே, வீட்டின் அருகே விட்டு விட்டு பால்ராஜ் தப்பி ஓடிவிட்டார்.

பின்னர் அழுதபடியே சென்ற சிறுமி, நடந்த விவரத்தை தாயிடம் எடுத்துக்கூறி கதறி அழுதார். இதனை தொடர்ந்து குளச்சல் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் போக்சோ உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து தப்பி ஓடிய பால்ராஜை கைது செய்தனர். 

 

Tags:    

மேலும் செய்திகள்