சென்னை விமான நிலையத்தில் ரூ.1.75 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் ரூ.1.75 கோடி மதிப்புள்ள கடத்தல் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.;

Update:2024-11-14 11:27 IST

File image

சென்னை,

சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் கொழும்புவில் இருந்து சென்னை வந்த 3 பயணிகளிடம் இருந்து 2 கிலோ 300 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த கடத்தல் தங்கத்தின் சர்வதேச மதிப்பு ரூ.1.75 கோடி என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்