திருத்தணி சாலை விபத்தில் 5 பேர் உயிரிழந்தது வருத்தம் அளிக்கிறது: எடப்பாடி பழனிசாமி
படுகாயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.;
சென்னை,
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
திருத்தணி அருகே அரசுப் பேருந்து- லாரி நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும் , மேலும் பலர் படுகாயமடைந்து உள்ளதாகவும் வரும் செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்வதுடன், படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளோர்க்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு திமுக அரசை வலியுறுத்துகிறேன்.என தெரிவித்துள்ளார்.