6-வயது சிறுவனுடன் தகாத உறவு.. போக்சோ சட்டத்தில் சலூன் கடை ஊழியர் கைது

சிறுவனுடன் தகாத உறவில் ஈடுபட்ட சலூன் கடை ஊழியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.;

Update:2025-10-23 00:14 IST

சென்னை,

பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் உபேந்திர குமார் (வயது 41). இவர் சென்னை மந்தைவெளியில் உள்ள சலூன் கடை ஒன்றில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவர் 6-வயது சிறுவனிடம் தகாத உறவில் ஈடுபட்டதாக மயிலாப்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து போக்சோ சட்டப்பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். இந்த நிலையில், பாதிக்கப்பட்ட சிறுவனின் உறவினர்கள் உபேந்திர குமாரை பிடித்து மயிலாப்பூர் அனைத்து மகளிர் போலீசாரிடம் நேற்று ஒப்படைத்தனர். போக்சோ சட்டப்பிரிவின் கீழ் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்