நெல்லை மாநகரில் தொடர் பைக் திருட்டு: 3 பேர் கைது, 8 பைக் மீட்பு

நெல்லையில் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்ட குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் பொருட்டு கிடைக்கப்பெற்ற ஆதாரங்களின் அடிப்படையில் போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர்.;

Update:2025-06-20 21:46 IST

திருநெல்வேலி மாநகர பகுதிகளில் தொடர்ச்சியாக இருசக்கர வாகன திருட்டு சம்பவங்கள் நடந்து வந்தது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் பொருட்டு கிடைக்கப்பெற்ற ஆதாரங்களின் அடிப்படையில் போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர். அதில் தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தைச் சேர்ந்த பிரபாகர்ராஜா (வயது 28), தென்காசி மாவட்டம், மாறாந்தையைச் சேர்ந்த சரவணன்(45) மற்றும் இசக்கிமுத்து(25) ஆகிய 3 பேர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து மேற்சொன்ன 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 8 இருசக்கர வாகனங்கள் மீட்டுள்ளனர். மேலும் மீட்கப்பட்ட வாகனங்களில் மதுரை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலிருந்து திருடப்பட்ட வாகனங்களும் உள்ளன. இதனை தொடர்ந்து குற்றவாளிகளை பாளையங்கோட்டை போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்