தூத்துக்குடியில் தந்தையை கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை

தூத்துக்குடியில் தந்தையையும், தாயையும் ஆத்திரத்தில் மகன் கம்பால் தாக்கியபோது தந்தை உயிரிழந்தார்.;

Update:2025-06-20 20:42 IST

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர், சோனகன்விளை பகுதியைச் சேர்ந்த தங்கவேல் மகன் முத்து (வயது 83), கடந்த 8.6.2022 அன்று அவரது வீட்டில் உடல்நல குறைவோடு இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த அவரது மகன் சுடலைமணி(51), தந்தை முத்துவை மருத்துவமனைக்கு அழைத்துள்ளார். இதற்கு முத்துவும் அவரது மனைவி ரோஜாவும்(68) மருத்துவமனைக்கு வருவதற்கு மறுப்பு தெரிவித்து சுடலைமணியிடம் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சுடலைமணி தாய் ரோஜாவையும் தந்தை முத்துவையும் கம்பால் தாக்கியதில் முத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து குரும்பூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து சுடலைமணியை கைது செய்தனர்.

இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி முருகன் இன்று குற்றவாளி சுடலைமணிக்கு ஆயுள் தண்டனை, ரூ.3,000 அபராதம் மற்றும் 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.1,000 அபராதம் விதித்து மேற்சொன்ன தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கினார்.

இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய குரும்பூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன், குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் எல்லம்மாள், விசாரணைக்கு உதவியாக இருந்த ஏட்டு எப்சி ஆகியோரை மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட்ஜான் பாராட்டினார். 

Tags:    

மேலும் செய்திகள்