தொடர் விடுமுறையை முன்னிட்டு கிளாம்பாக்கத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்
கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.;
சென்னை,
தொடர் விடுமுறை, முகூர்த்தம், விநாயகர் சதுர்த்தி மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு கிளாம்பாக்கத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக வேலாண் இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார்.
அதன்படி கிளாம்பாக்கத்தில் இருந்து 26-ந்தேதி 675 பேருந்துகளும், 28-ந்தேதி 610 பேருந்துகளும், 29-ந்தேதி 405 பேருந்துகளும், 30-ந்தேதி 380 பேருந்துகளும், 31-ந்தேதி 875 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூரில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 350 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதே போல், ஞாயிறுக்கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னை, பெங்களூரு திரும்ப வசதியாக அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.