வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம்: தலைமை தேர்தல் அதிகாரி தலைமையில் ஆலோசனை தொடங்கியது

டிசம்பர் 9-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.;

Update:2025-10-29 17:29 IST

சென்னை,

தமிழகம் உள்பட 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணி என்ற எஸ்.ஐ.ஆர் நடைபெற உள்ளது. அதற்காக வருகிற 4-ந் தேதி முதல் டிசம்பர் மாதம் 4-ந் தேதி வரை பூத் லெவல் அதிகாரிகள் வீடு வீடாக வந்து கணக்கெடுப்பு படிவத்தை கொடுப்பார்கள் என்றும் அந்த படிவத்தை பொதுமக்கள் நிரப்பி தர வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

டிசம்பர் 9-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் பின் பிப்ரவரி மாதம் 7-ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர். அறிவிக்கப்பட்டு உள்ளதால் இதுதொடர்பாக அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் காணொலி காட்சி மூலம் நேற்று ஆலோசனை நடத்தினார்.

இந்த நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தொடர்பாக தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், பாஜக, தேமுதிக, நாதக, விசிக, ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்