திருப்பூர் வழியாக ஹுப்ளி-கொல்லம் இடையே சிறப்பு ரெயில்

ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 3.15 மணிக்கு ஹுப்ளியிலிருந்து புறப்பட்டு சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக கொல்லத்தை சென்றடையும்.;

Update:2025-09-27 09:52 IST

திருப்பூர்,

பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் தென்னக ரெயில்வே திருப்பூர் வழியாக ஹுப்ளி-கொல்லம் இடையே சிறப்பு ரெயில்களை இயக்க உள்ளது. இந்த ரெயில் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 3.15 மணிக்கு ஹுப்ளியிலிருந்து புறப்பட்டு சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக மறுநாள் நண்பகல் 12.55 மணிக்கு கொல்லத்தை சென்றடையும். நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் டிசம்பர் 28-ந்தேதி வரை இந்த ரெயில் இயக்கப்படுகிறது.

இதேபோல் கொல்லத்திலிருந்து திங்கட்கிழமைகளில் மாலை 5 மணிக்கு புறப்படும் ரெயில் மறுநாள் மாலை 6.30 மணிக்கு ஹுப்ளியை சென்றடையும். நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல் டிசம்பர் 29-ந் தேதி வரை இந்த சேவை நடைபெறும். இந்த ரெயிலில் 2-ம் வகுப்பு, 3-ம் வகுப்பு ஏ.சி. பெட்டிகள், படுக்கை வசதி கொண்ட பெட்டிகள், முன்பதிவில்லாத பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். மேற்கண்ட தகவலை தென்னக ரெயில்வேயின் சேலம் கோட்ட மக்கள் தொடர்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.  


Tags:    

மேலும் செய்திகள்