சென்னையில் நாளை முதல் டீ, காபி விலை உயர்வு

பால் விலை, டீ/காபி தூள் விலை உயர்வால் இந்த முடிவு என டீ கடை வியாபாரிகள் சங்கம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.;

Update:2025-08-31 13:37 IST

சென்னை,

பொதுமக்களின் பட்ஜெட்டை காலி செய்யும் வகையில் பல்வேறு பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. காய்கறி விலை முதல் தங்கம் விலை வரை எங்கு பார்த்தாலும் விலையேற்றம்தான். போதாத குறைக்கு சமையல் சிலிண்டர், பெட்ரோல் விலையும் எக்குத்தப்பாக விலை உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். இந்தநிலையில்,

பொதுமக்களுக்கு மற்றொரு அதிர்ச்சி செய்தியாக, தற்போது டீ , காபி விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.

பால் விலை, டீ/ காபி தூள் விலை உயர்வு, போக்குவரத்து செலவு அதிகரிப்பால் வேறு வழியில்லாமல் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக டீ கடை வியாபாரிகள் சங்கம் தகவல் தெரிவித்துள்ளது. ஒரு கிளாஸ் டீ ரூ.12ல் இருந்து ரூ.15 ஆகவும், காபி ரூ.15ல் | இருந்து ரூ.20 ஆகவும் உயர்த்தப்படுகிறது. சென்னையில் இந்த விலை உயர்வு உடனடியாக நாளை முதல் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் டீ கடைகளில் ஒட்டப்பட்டுள்ள புதிய விலைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 3 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் டீ, காபி விலை உயர்த்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் டீ கடைகளில் ஒட்டப்பட்டுள்ள புதிய விலைப்பட்டியல்




Tags:    

மேலும் செய்திகள்