காஞ்சிபுரத்தில் விஜய் வருகைக்காக தயாராகும் இடம் - த.வெ.க. பொதுச்செயலாளர் ஆய்வு

காஞ்சிபுரத்தில் விஜய் வருகைக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை த.வெ.க பொதுச்செயலாளர் ஆனந்த் பார்வையிட்டார்.;

Update:2025-01-17 19:50 IST

காஞ்சிபுரம்,

காஞ்சிபுரம் மாவட்டம் ஏகனாபுரத்தில் பசுமை விமான நிலையத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, 900 நாட்களுக்கு மேலாக போராடி வரும் பரந்தூர் போராட்டக் குழுவினரை தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவிக்க உள்ளார்.

இந்த நிலையில், ஏகனாபுரம் மக்களை சந்திக்க அம்பேத்கர் சிலை அருகே, 5 ஏக்கர் பரப்பளவில் தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை சமன்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகளை தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த் பார்வையிட்டார். 

Full View
Tags:    

மேலும் செய்திகள்